நமது கொழுமம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில்
நிகழும் ஸ்ரீ ஜய வருடத்தில் இந்த இனிய 2015-ம் புத்தாண்டின் முதல் சிறப்பு நிகழ்வாக 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தன்று
அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி அங்காளம்மன்
என்ற ரூபத்தின் சந்தன அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பல ஊர்களிலும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வந்திருந்து மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை தரிசனம் செய்து அம்மனின் பேரருள் பெற்றனர்.

நிகழ்ச்சி நிரல்படி திருவாளர்கள் சங்கர் மற்றும் குழுவினரின் தமிழ் முறை அர்ச்சனை மற்றும் பாராயணம் முதல் நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து திருவாளர்கள் சுகவனம் மற்றும் குழுவினரின் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாராயணம் தெய்வீகமாக அமைந்து இருந்தது.

பின்னர் நமது மகளிர் குழுவினரின் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாராயணம் மிக நிறைவாக அமைந்தது.

அதனைத்தொடர்ந்து நிறைவு நிகழ்ச்சியாக பக்திப்பாடல்களின் இன்னிசையுடன் இந்த முதல் பௌர்ணமி தின வழிபாடு வெகு விமரிசையாக நடந்தேறியது.

அனைத்து பக்தர்களுக்கும் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.

நமது அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் அருள் நம் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்க பிரார்த்திப்போம் !

நிகழும் 2015 - ஸ்ரீ ஜய வருடத்தில் 3-வது அமாவாசை தினம் - 20.03.2015 வெள்ளிக்கிழமை அன்று
மூலமந்திர ஜப ஹோமம்
வெகு விமரிசையாக நடந்தேறியது.

ஹோமம் கட்டளைதாரர்கள் : உயர்திரு. J . மணி & திருமதி. புவனேஸ்வரி குடும்பத்தார. கோவை

பக்தர்கள் பெருமளவில் தமது குடும்பத்தாருடன் வந்திருந்து காலை 10.00 மணி முதல் மதியம் வரை நடைபெற்ற ஜப ஹோம பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அம்மனின் பேரருளுக்குப் பாத்திரமானார்கள்.

அனைத்து பக்தர்களுக்கும் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.

இனி வரும் அனைத்து பூஜை நிகழ்ச்சிகளிலும் நமது குடும்பத்தார் அனைவருடனும் தொடர்ந்து பங்கேற்று அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருள் பெறுவோம்!

கட்டளைதாரர்கள் தமது விருப்பமான நாட்களில் பூஜைகளுக்கு முன் பதிவு செய்து வருவதால் அனைவரும் முன்கூட்டியே தங்களது தேதிகளை பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.